செய்திகள்

வெற்றிகரமான தோல்வி: சாதனை படைத்த வங்கதேசம்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்துள்ளது வங்கதேசம் அணி. 

DIN

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள். 3 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் 2-1 என ஒருநாள் தொடரினை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. 

முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 3வது போட்டியில் நியூசிலாந்தை 98 ரன்களுக்கு சுருட்டியது வங்கதேசம். 15.1 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை பெற்றது. 

பௌலிங்கில் சொரிஃபுல் இஸ்லாம், டன்ஜிம் ஹசன் ஷகிப், சௌமியா சர்கார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பேட்டிங்கில் ஷண்டோ அரைசதமடித்து அசத்தினார். 

இந்தத் தொடரினை வங்கதேசம் இழந்தாலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. 

தொடரினை இழந்தாலும் இது வெற்றிகரமான தோல்வியாக மாற்றியுள்ளார்கள் வங்கதேச அணியினர். 

அடுத்து முதல் டி20 டிச.27ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. டிச.29, டிச.31 ஆகிய தேதிகளில் 2,3வது போட்டிகள் நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT