படம்: எக்ஸ் | ஹார்திக் பாண்டியா 
செய்திகள்

ஐபிஎல் தொடரில் விலகும் ஹார்திக் பாண்டியா?

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார்.

தொடர்ந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை.

இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹார்திக் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

தற்போது ஹார்திக் பாண்டியா விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: கதிா் ஆனந்த் எம்.பி. வழங்கினாா்

போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

SCROLL FOR NEXT