படம் : எக்ஸ்| ஹசரங்கா 
செய்திகள்

இலங்கை டி20 அணிக்கு ஹசரங்கா கேப்டன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் 2024ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. 

உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய இலங்கை அணி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நிகழ்வுகளை சந்தித்து வருகின்றன. 

ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ஒருநாள் போட்டிகளுக்கு குஷால் மெண்டிஸ் கேப்டாகவும் டி20 போட்டிகளுக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். 

ஒருநாள் அணி: குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரிதா அசலங்கா (துணைக் கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா, சஹான் அராச்சிகே, நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷனாகா, கமிந்து மெண்டிஸ், மகேஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷனகா, துஷ்மந்த சமீரா, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷன், அசிதா பெர்னாண்டோ, அகிலா தனஞ்செயா, ஜெஃப்ரி வண்டர்சே, சமிகா குணசேகரா. 

டி20 அணி: வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரிதா அசலங்கா (துணைக் கேப்டன்), பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ்,  சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷனாகா, ஆஞ்சலோ மேத்வ்யூஸ், தனஞ்செய டி செல்வா, மகேஷ் தீக்‌ஷனா, குசால் ஜனித் பெரேரா, பனுகா ராஜபக்‌ஷா, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, அகிலா தனஞ்செயா, ஜெஃப்ரி வண்டர்சே, சமிகா கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷன், மதீஷா பதீரானா. 

படம்: இலங்கை கிரிக்கெட் வாரியம் இணையதளம். 

சுழல்பந்து மற்றும் பேட்டிங்கில் அசத்தும் ஹசரங்காவுக்கு இது நல்ல வாய்ப்பு என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT