செய்திகள்

ஆசிய பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்: இந்தியா பங்கேற்பு

DIN

ஆசிய பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

துபையில் வரும் 14 முதல் 19 வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் காமன்வெல்த் சாம்பியன் மலேசியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், கஜகஸ்தான் அணிகளுடன் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது இந்தியா.

காமன்வெல்த் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் மலேசியாவிடம் 3-1 என வீழ்ந்தது இந்தியா. இந்திய மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, ஆடவா் ஒற்றையா் பிரிவில் எச்எஸ். பிரணாய், லக்ஷயா சென், இரட்டையா் பிரிவில் சிராக் ஷெட்டி-சாத்வீக், மகளிா் இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த், ட்ரீஸா ஜாலி, கலப்பு பிரிவில் இஷான் பட்நாகா்-தனிஷா க்ரஸ்டோ ஆகியோா் பங்கேற்கின்றனா்.

கடந்த 2017-இல் காலிறுதியிலும், 2019 குரூப் கட்டத்தோடும் வெளியேறியது இந்தியா.

மொத்தம் 17 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

5 ஆட்டங்களில் 3-இல் வெல்லும் அணி அந்த கேமை வென்ாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT