செய்திகள்

உயரப் பறக்கும் தெலுங்குக் கொடி: ஆந்திர முதல்வர் பெருமிதம்!

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்துக்கு ஆந்திர முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். இந்திய டெஸ்ட் அணிக்கான தொப்பியை சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரியும் பரத்துக்கு புஜாராவும் வழங்கினார்கள். அதேபோல ஆஸி. அணியில் மர்பி அறிமுகமாகியுள்ளார்.  சூர்யகுமார், பரத் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், டெஸ்ட் ஆட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இருவருக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். பரத்தின் தாய் தன் மகனுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த 29 வயது கே.எஸ். பரத்துக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

எங்களுக்குச் சொந்தமான கே.எஸ். பரத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். தெலுங்குக் கொடி தொடர்ந்து உயரப் பறக்கிறது என்று கூறி தெலுங்குப்பெருமிதம் என்கிற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT