உனாட்கட் (கோப்புப் படம்) 
செய்திகள்

2ஆவது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் உனாட்கட் விடுவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் செளராஷ்டிரம் அணிக்காக உனாட்கட் விளையாடுவதால் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி சார்பில் சிராஜ், ஷமி, உமேஷ்யாதவ், ஜெயதேவ் உனாட்கட் ஆகிய 4 வேகப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் ஜெயதேவ் உனாட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT