செய்திகள்

2-வது டெஸ்டில் விளையாடும் வாய்ப்புண்டா?: ஸ்டார்க் பதில்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

DIN

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 

காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் காயமடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2-வது டெஸ்டில் விளையாடுவது பற்றி ஸ்டார்க் கூறியதாவது:

என்னுடைய பந்துவீச்சில், உடற்தகுதியில் இன்னும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. உடலில் இன்னும் வலு தேவைப்படுகிறது. மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருகிறேன். நான் நினைத்தது போல முன்னேற்றம் வேகமாக நடைபெறவில்லை. ஆனால் மருத்துவக் குழுவினர் திட்டமிட்டபடி முன்னேற்றம் கண்டு வருகிறேன். இன்னும் சில விஷயங்களை நான் அடையவேண்டும். ஆனால் முன்னேறி வருகிறேன் என்பது உண்மை. 

2-வது டெஸ்டில் நான் விளையாட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நான் எப்படி பந்துவீசுகிறேன் என அலச வேண்டும். மருத்துவக் குழுவினர் எப்படி அணுகுகிறார்கள், என்னுடைய உடற்தகுதி பற்றி கேப்டன் கம்மின்ஸும் தேர்வுக்குழுவினரும் என்ன நினைக்கிறார்கள் போன்றவை முக்கியம். 2-வது டெஸ்டுக்கு என்னைத் தேர்வு செய்வதற்கான அனைத்து பணிகளையும் நான் செய்வேன். அதற்குப் பிறகு அணியினருடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT