செய்திகள்

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன். இல்லாவிட்டால்...: ஷிகர் தவன்

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல வீரர் ஷிகர் தவன்.

PTI


இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல வீரர் ஷிகர் தவன்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுமாராக விளையாடிய ஷிகர் தவன், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் மொஹலியில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் பயிற்சி முகாமில் தவன் கலந்துகொள்ளவுள்ளார். 

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தவன் கூறியதாவது:

மேடு பள்ளங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம். என்னை விட ஒருவர் நன்றாக விளையாடினால் நல்லதுதான். அதனால் தான் அந்த வீரர் அணியில் இருக்கிறார். நான் இல்லை. எனக்கென்று உள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. அது நடந்தால் நல்லது. இல்லாவிட்டால் அதுவும் நல்லதுதான். நான் நிறைய சாதித்து விட்டேன். அதில் மகிழ்ச்சியாக உள்ளேன். எது கிடைக்குமோ அது நிச்சயம் கிடைக்கும். அதற்காக நான் தவிக்கப்போவதில்லை. விரைவில் ஐபிஎல் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளேன். பஞ்சாப் அணிக்குத் தலைமை தாங்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT