செய்திகள்

ஐபிஎல் போட்டிக்குத் தயார்: அறிவித்தார் பிரபல சிஎஸ்கே வீரர்!

காயத்திலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் அறிவித்துள்ளார்.

DIN

காயத்திலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் அறிவித்துள்ளார்.

30 வயது தீபக் சஹார், 2022-ல் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவில்லை. கடைசியாகக் கடந்த டிசம்பரில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். பிறகு, நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக தீபக் சஹார் கூறியுள்ளார். கடந்த மாதம் ஒரு ரஞ்சி கோப்பை ஆட்டத்திலும் விளையாடினார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சஹார் கூறியதாவது:

கடந்த 2, 3 மாதங்களாக என்னுடைய உடற்தகுதிக்காக மிகவும் பாடுபட்டுள்ளேன். தற்போது முழு உடற்தகுதியை அடைந்து ஐபிஎல் போட்டியில் விளையாடத் தயாராக உள்ளேன். இரு பெரிய காயங்களால் பல மாதங்கள் விளையாடாமல் இருந்தேன். சரியான உடற்தகுதியுடன் நான் விளையாட ஆரம்பித்தால் என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் நான் இடம்பெறுவேன் என நம்பிக்கையுடன் உள்ளே என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

SCROLL FOR NEXT