செய்திகள்

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர்!

உலக சாம்பியன் கார்ல்சனை இந்திய இளம் வீரர் விதித் குஜ்ராதி வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

DIN

உலக சாம்பியன் கார்ல்சனை இந்திய வீரர் விதித் குஜ்ராதி வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ப்ரோ செஸ் லீக் போட்டியில் கார்ல்சனுடன் மோதினார் இந்தியன் யோகிஸ் அணியைச் சேர்ந்த விதித் குஜ்ராதி. இணைய வழியில் நடைபெற்ற ஆட்டத்தில் 58-வது நகர்த்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார் கனடா செஸ்ப்ராஸ் அணியைச் சேர்ந்த கார்ல்சன். இதன்மூலம் முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் 28 வயது விதித் குஜ்ராதி. மேலும் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். 

அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியன் யோகிஸ் அணி, கனடா அணியை வீழ்த்தியது. 16 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT