செய்திகள்

சிஎஸ்கேவுக்குப் பாதிப்பு?: அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்க ஸ்டோக்ஸ் முடிவு!

அயர்லாந்து டெஸ்டில்  பங்கேற்பேன் என இங்கிலாந்து கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

DIN

அயர்லாந்து டெஸ்டில்  பங்கேற்பேன் என இங்கிலாந்து கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. மார்ச் 31 முதல் மே 28 வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 1 அன்று டெஸ்டில் விளையாடவுள்ளது. அதன்பிறகு ஜூன் 16-ல் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்கவுள்ளதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டி முடியும் முன்பே அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கடைசி ஆட்டங்களில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் நான் விளையாடுவேன். போதுமான அவகாசத்தில் அணிக்கு மீண்டும் திரும்பி அந்த டெஸ்டில் விளையாடவுள்ளேன். (ஐபிஎல்-லில் விளையாடும்) மற்ற வீரர்களிடம் அவர்களுக்கு எது செளகரியம் என்று விசாரிப்பேன். ஆஷஸ் தொடரில் நல்ல உடற்தகுதியுடன் பங்கேற்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT