செய்திகள்

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021-ல் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் - பயிற்சியாளர் டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடவுள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயது மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் எஸ்ஏ 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை தாங்கி, சாம்பியன் பட்டம் வென்றார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT