செய்திகள்

ஐபிஎல் போட்டியில் பும்ரா விளையாடுவது சந்தேகம்!

ஐபிஎல் 2023 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

ஐபிஎல் 2023 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டது. மும்பையில் பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது தான் பும்ராவால் சர்வதேச ஆட்டத்தில் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது தற்போது சாத்தியமில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அணியில் இருந்து அவர் விலகினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ரா சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் காயம் இன்னும் குணமாகாததால் பும்ராவால் ஐபிஎல் 2023 போட்டியிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஐபிஎல் 2023 போட்டியில் பும்ரா இல்லாத காரணத்தால் மும்பை அணிக்குப் பின்னடைவாக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

காயத்திலிருந்து பும்ரா முழுவதும் குணமடைந்து, முழு உடற்தகுதியை அடைந்து, அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே பிசிசிஐயின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது. பும்ராவின் காயம் பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT