செய்திகள்

சிட்னி டெஸ்டில் விளையாடும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸி. வீரர்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸி. வீரர் மேட் ரென்ஷா, சிட்னி டெஸ்டில் விளையாடும் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸி. வீரர் மேட் ரென்ஷா, சிட்னி டெஸ்டில் விளையாடும் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்.

சிட்னியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு முன்பே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்துக்காக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. லைட் மீட்டரில் சரியான அளவு காண்பிக்காததால் ஆட்டத்தை நடுவர் தொடங்கவில்லை. இதன்பிறகு ஆட்டம் மீண்டும் 4.45 மணிக்குத் தொடங்கி மீண்டும் நிறுத்தப்பட்டது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தபோது வெளிச்சமின்மை, மழை காரணங்களால் முதல் நாள் ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் போனது. இதனால் டெஸ்ட் ஆட்டத்தைக் காண வந்த 31,000 ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இந்நிலையில் 2018-க்குப் பிறகு ஆஸி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த மேட் ரென்ஷா தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனையில் இதுபற்றி தெரிய வந்தாலும் சிட்னி டெஸ்டில் விளையாடும் ஆஸி. அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். நெ.6 பேட்டராக அவர் களமிறங்கவுள்ளார். 

டெஸ்ட் ஆரம்பிக்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன. அப்போது அணி வீரர்களிடமிருந்து தள்ளி நின்றிருந்தார் ரென்ஷா. அதேபோல அணி வீரர்கள் அமரும் இடத்தில் அமராமல் தனியே அமர்ந்திருந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த டெஸ்டில் ரென்ஷா விளையாடுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் கரோனா மாற்று வீரராக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 

சமீபத்திய விதிமுறைகளின்படி கரோனாவால் எந்த வீரர் பாதிக்கப்பட்டாலும் அவரால் ஆட்டத்தில் பங்கேற்க முடியும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வீராங்கனை தஹிலா மெக்ராத் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT