செய்திகள்

அக்‌ஷர், சூர்யகுமார் அதிரடி: இந்தியா போராடி தோல்வி! 

DIN

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (ஜனவரி5) புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கேப்டன் தசுன் ஷானகா (56*), குஷால் மெண்டிஸ் (52) அதிரடியால் இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இஷான் 2 ரன்கள், சுப்மன் கில் 5 ரன்கள், ராகுல் த்ரிபாதி 5 ரன்கள், ஹார்திக் பாண்டியா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 4.4 ஓவரில் இந்திய அணி 34/4 ஆக இருந்தது. 

பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய அக்‌ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் இலங்கை அணியின் பந்து வீச்சினை நாலாபுறமும் சிதறியடித்தனர். இதில் அக்‌ஷர் படேல் 20 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தினர். இலங்கையின் நட்சத்திர ஸ்பின்னர் ஹசரங்கா ஓவரை பிரித்து மேய்ந்தனர். 

15.5வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிக்க முயன்று மதுஷனகா ஓவரில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்பு மோசமடைந்தது. 

பின்னர் ஷிவம் மாவி (26) அதிரடியாக விளையாடினார். அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை இலங்கை கேப்டன் ஷானகா அற்புதமாக வீசினார். 

20 ஓவர் முடிவில் இந்திய 8 விக்கெட்டுகள் இழந்து அணி 190 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை 1-1 என சமநிலையில் வைத்துள்ளது. 

தசுன் ஷானகா தனது சிறப்பான பேட்டிங், பந்து வீச்சிற்காக ஆட்டநாயகன் விருதினை பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT