செய்திகள்

இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவராக சேதன் சர்மா மீண்டும் தேர்வு!

DIN

இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரை சேதன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே இந்திய அணியைத் தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு, சேதன் சர்மாவையே மீண்டும் நியமித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

தேர்வுக்குழுவில் பணியாற்ற 600 பேர் விண்ணப்பித்ததில் 11 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களிலிருந்து தேர்வானவர்கள்: 1. சேதன் சர்மா, 2. ஷிவ் சுந்தர் தாஸ், 3. சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத். இவர்களில் சேதன் சர்மாவைத் தேர்வுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவில் உள்ள ஸ்ரீதரன் ஷரத், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 139 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT