இந்திய அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்த இரு வீரர்கள் வேண்டாம்: ஸ்ரீகாந்த் அதிரடி

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் குறிப்பிட்ட இரு வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறக் கூடாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

DIN

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் குறிப்பிட்ட இரு வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறக் கூடாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஒருநாள் உலகக் கோப்பைக்காக 20 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னுடைய பட்டியலில் ஷுப்மன் கில்லும் ஷர்துல் தாக்குரும் இருக்க மாட்டார்கள். 

வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோர் இருப்பார்கள். நான்கு பேர் போதும். ஷமி இருந்தாலும் இருக்கலாம். தேர்வுக்குழுத் தலைவராக என் கருத்தைச் சொல்கிறேன். ரசிகராக அல்ல. ஹூடாவைத் தேர்வு செய்வேன். இவர்கள் தான் ஜெயித்துக் காட்டுவார்கள். யூசுப் பதான் போல தனி ஆளாக ஆட்டத்தை வெல்லக்கூடிய வீரர்கள் அணிக்கு வேண்டும். 

ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் 10 ஆட்டங்களில் 3 ஆட்டங்களை வென்று கொடுத்தால் போதும். இவர்களிடம் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்காதீர்கள். நம்மிடம் ரிஷப் பந்த் உள்ளார். அவர் தொடர்ந்து எல்லா ஆட்டங்களிலும் நன்றாக விளையாட வேண்டியதில்லை. ஆட்டத்தை வென்று தர வேண்டும். இதை யார் செய்து தருவார்? ரிஷப் பந்தால் செய்ய முடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT