செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: பிரபல தென்னாப்பிரிக்க வீரர் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரிடோரியஸ் இடம்பெற்றுள்ளார். 

DIN


பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிடோரியஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயது பிரிடோரியஸ் 2016 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்டுகள், 27 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய (பாகிஸ்தானுக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்) வீரராகவும் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 164 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் என்கிற பெயரைப் பெற்றிருந்தார். 

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிடோரியஸ் அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரிடோரியஸ் இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும்: பிரதமா் மோடி

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

SCROLL FOR NEXT