செய்திகள்

அதிக ரன்கள் எடுத்தும் அடுத்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத வீரர்!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து அடுத்த ஆட்டத்தில் விளையாடாத வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்...

DIN

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் இஷான் கிஷன் இடம்பெறவில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதற்கு முன்பு இந்திய அணி விளையாடிய ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்தார் இஷான் கிஷன். 131 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 210 ரன்கள் எடுத்தார்.

எனினும் இந்திய அணியின் அடுத்த ஆட்டத்தில் இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில்லுக்கு முன்னுரிமை அளித்துள்ளது இந்திய அணி. 

இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து அடுத்த ஆட்டத்தில் விளையாடாத வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ், 123 ரன்கள் எடுத்தும் அடுத்த ஆட்டத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்காக வழிவிட நேர்ந்தது. டேரன் லேஹ்மன் 119 ரன்கள் எடுத்து அடுத்த ஆட்டத்தில் கில்கிறிஸ்டுக்காக வெளியே உட்கார நேர்ந்தது. அதேபோல இரட்டைச் சதமடித்தும் அணியில் விளையாட முடியாத நிலை இஷான் கிஷனுக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT