முகப்பு
செய்திகள்

ரோஹித், ஷுப்மன் கில் அபார பேட்டிங்: பெரிய ஸ்கோருக்குத் திட்டமிடும் இந்திய அணி!

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்த நிலையில்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி, 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தீக்‌ஷனாவுக்குப் பதிலாக துனித் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேசத்தில் இரட்டைச் சதமெடுத்த இஷான் கிஷன், டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் இடமில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக சஹாலும் அக்‌ஷர் படேலும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆரம்பம் முதல் ரன்களை விரைவாக எடுத்தார்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும். 10 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்திருந்தார். பிறகு 41 பந்துகளில் ரோஹித் சர்மாவும் 51 பந்துகளில் ஷுப்மன் கில்லும் அரை சதங்களை எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்த நிலையில் ஷனகா பந்தில் ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். அவர் 60 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 27, ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →