செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

DIN

உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியா - ஸ்பெயின் மோதும் ஆட்டம், உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான ரூா்கேலாவில் உள்ள பிா்சா முண்டா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் 12வது நிமிடத்திலும், 26வது நிமிடத்திலும் இந்திய அணி கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. அதேசமயம் ஸ்பெயின் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் இந்திய அணியினர் முறியடித்தனர். 

இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT