செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி ஆட்டம்: தமிழ்நாடு அணிக்குப் புதிய கேப்டன்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு - அஸ்ஸாம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

DIN

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு - அஸ்ஸாம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

எலைட் - குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஒரு வெற்றியும் பெறாமல் 4 டிராக்களுடன் 8 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். சாய் கிஷோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு அணியின் அடுத்த ரஞ்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மதிய உணவு இடைவேளையின்போது தமிழ்நாடு அணி, 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்துள்ளது. ஜெகதீசன் 77, இந்திரஜித் 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மந்திரப் பார்வை... ஷபானா!

சர்வதேச பயணி... ரியா விஸ்வநாதன்!

மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

வானுக்கும் கடலுக்கும்... அந்தாரா!

இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 - 72% இந்தியர்கள்!

SCROLL FOR NEXT