செய்திகள்

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு அறிவிப்பு

எஸ்ஏ 20 போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருகிறார். 

DIN

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயது ஆம்லா, 2004 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்டுகள், 181 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது. இந்நிலையில் பயிற்சியாளராகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தற்போது அறிவித்துள்ளார்.

எஸ்ஏ 20 போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT