செய்திகள்

108 ரன்களுக்கு நியூசி. அணியை ஆட்டமிழக்கச் செய்தது எப்படி?: பாண்டியா

2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி ஆல்ரவுண்டர் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் இல்லை. 10.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. 6-வது மற்றும் 7- விக்கெட்டுக்கு தலா 40 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் நியூசிலாந்து பேட்டர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில், நியூசிலாந்து அணி, 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி 3, பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சிராஜ், தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி ஆல்ரவுண்டர் பாண்டியா கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் பந்துவீசத் தொடங்கியிருக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நல்லவிதமாக உணர்கிறேன். சரியான நேரத்தில் எல்லாமே நடக்கிறது. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஓர் ஒழுங்குடன் பந்துவீசினோம். பேட்டர்கள் அடித்த ஷாட்கள் எல்லாம் கேட்சுகளாக மாறிய தினம் இன்று. நிச்சயமாக 108 ரன்கள் மட்டுமே எடுக்கக்கூடிய ஆடுகளமல்ல இது. ஆனால் ஒவ்வொரு வாய்ப்பும் கேட்சுகளாகக் கிடைத்தன. எனவே குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துவிட்டோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Dinamani வார ராசிபலன்! | Aug 24 முதல் 30 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தெய்வ தரிசனம்... கோபம் போக்கும் திருஇடும்பாவனம் சற்குணநாதேசுவரர்!

SCROLL FOR NEXT