முகப்பு
செய்திகள்

ஜடேஜா ஏமாற்றம்: 192 ரன்களுக்கு ஆட்டமிழந்த செளராஷ்டிர அணி!

ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் செளராஷ்டிர அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Updated On : 26 ஜனவரி, 2023 at 3:16 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் செளராஷ்டிர அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியுள்ளது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

Advertisement

இந்நிலையில் 3-ம் நாளான இன்று செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.