செய்திகள்

பாகிஸ்தான் கேப்டனுக்கு இரு விருதுகள்: பெருமைப்படுத்திய ஐசிசி

கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

DIN


2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

2022-ம் வருடம் அனைத்து வகை போட்டிகளிலும் 2000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆஸம். 44 ஆட்டங்களில் 2598 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 54.12. 2022-ல் மட்டும் 8 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். 

2021-ல் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வான பாபர் ஆஸம், 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராகவும் ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளார். 9 ஆட்டங்களில் 679 ரன்கள் எடுத்தார். இதனால் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில் வருடம் முழுக்க சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால், 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார். இதையடுத்து சோபர்ஸ் கோப்பை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT