உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதையும் படிக்க- யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இந்தியா சாம்பியன்
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் போட்டி சமநிலையில் இருந்தது.
இதனால் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கடைப்பிடிக்கப்பட்டது.
இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழத்தி ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை ஹாக்கியில் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜெர்மனி அசத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.