செய்திகள்

முத்தரப்பு டி20: மே.இ. தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய மகளிர் அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீதி கெளர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்திய அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு தோல்வியும் இன்றி 7 புள்ளிகளைப் பெற்றது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் ஒருமுறை தோற்றது. 

வியாழன் அன்று நடைபெறும் முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT