ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லயனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திலும் பேட்டிங் செய்த லயன் 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. அதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்று 43 ரன்களில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதற்காக வீரர்களுக்கு இழப்பீடு வழங்கினோம்: பிசிபி
2-0 என முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான சுழல் பந்து வீச்சாளராக திகழ்பவர் லயன். 35 வதாகும் லயன் டெஸ்டில் 496 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: பெயர்ஸ்டோ விக்கெட்டுக்கு அஸ்வின் கூறியது என்ன?
இந்நிலையில் காயம் காரணமாக லயன் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த லயன் 101வது போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சச்சினுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றிய ஸ்மித்!
லயனுக்கு பதிலாக இன்னும் யாரையும் அணியில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக டாட் மர்ப்பி லயனுக்கு பதிலாக சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.