செய்திகள்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் மிட்செல் மார்ஸின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை தந்துள்ளது.

DIN

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் மிட்செல் மார்ஸின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை தந்துள்ளது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. டேவிட் வார்னர் 4 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, லபுஷேன் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், லபுஷேன் 21 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க: வெளியானது காவாலா பாடல்!

இதனையடுத்து, டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்தனர். டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 102 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹெட் 58 பந்துகளில் 35 ரன்கள் குவித்துள்ளார். 

மிட்செல் மார்ஸின் அதிரடி சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT