செய்திகள்

100வது டெஸ்டில் ஸ்மித் உலக சாதனை: இந்த முறை பேட்டிங்கில் அல்ல ஃபீல்டிங்கில்! 

DIN

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்டீவ் ஸ்மித். தனது அறிமுகப் போட்டியில் 21 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 8-வது வீரராக அவர் களமிறங்கினார். பௌலராக களமிறங்கி தற்போது டான் பிராட் மேன் உடன் ஒப்பிடும் அளவுக்கு பேட்டிங்கிலேயே தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 

100வது டெஸ்டில் ஸ்மித் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு இன்னிங்ஸிலும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஆனாலும் ஸ்மித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்கள். காரணம் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். விக்கெட் கீப்பர் அல்லாத ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடிப்பது அசாத்தியமான சாதனை. 

ஸ்மித் 2018இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச் பிடித்து அசத்தினார். தற்போது ஆஷஸ் டெஸ்டிலும் 2வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்கள் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். 

இதற்குமுன் ரிச்சர்ட்சன். அசாரூதின், ஸ்ரீகாந்த், பென் ஸ்டோக்ஸ் என பலரும் 5 கேட்சுகளை பிடித்திருந்தாலும் ஸ்மித் மட்டுமே இரண்டு முறை ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். 

மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் 165 கேட்ச்கள் பிடித்துள்ளார். அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ஸ்மித் 10ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 54 கேட்ச்களை பிடித்து இயான் போதமுடன் (54) சமநிலையில் உள்ளார். இரண்டாமிடத்தில் ஆலன் பார்டர் 51 கேட்ச்களுடன் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT