செய்திகள்

தோனி பகிர்ந்த பிறந்தநாள் விடியோ! அரை மணி நேரத்தில் 8 இலட்சம் லைக்குகள்! 

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனது பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று (7-7-1981) 42வது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளை குவித்தனர். 

ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே இந்தியக் கேப்டனாக தோனி இருக்கிறார். கீப்பர்- பேட்டர் என்பதை விடவும் அணியின் தலைவன் என்பதில் அனைவருக்கும் தோனி மீது தனிவிதமான அன்பு. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தோனி எப்போதும் நெருக்கமான ஒரு கிரிக்கெட் வீரர். முன்னம் ஒருநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளங்கள், செல்பேசி போன்றவற்றில் இருந்து ஒதுங்கியே இருக்கும் தோனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். தோல்வியிலும் உடன் இருந்தது என்னுடைய நாய்கள்தான்  என தோனி முன்னமே பல நேர்காணல்களில் கூறியுள்ளார். இந்த விடியோ 30 நிமிடத்தில் 8 இலட்சத்து 77ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் பெற்று வைரலாகி வருகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பதிவிட்டு தோனி கூறியதாவது: 

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பதற்கான சிறிய க்ளிம்ஸ் விடியோ இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT