செய்திகள்

அரையிறுதியில் சிந்து, லக்ஷயா

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

DIN

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 21-13, 21-7 என்ற கேம்களில் சீனாவின் ஜாவ் ஃபாங் ஜீயை சாய்த்தாா். இத்துடன் 4-ஆவது முறையாக ஜாவ் ஃபாங்கை சந்தித்த சிந்து, தனது முதல் வெற்றியை அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளாா். ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் லக்ஷயா சென் 21-8, 17-21, 21-10 என்ற கேம்களில் ஜொ்மனியின் ஜூலியன் கராகியை வீழ்த்தினாா்.

அடுத்ததாக அரையிறுதியில் சிந்து, உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிா்கொள்கிறாா். இருவரும் இதுவரை 24 முறை மோதிக்கொண்ட நிலையில், அதில் சிந்து 14 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். என்றாலும், கடைசியாக இருவரும் சந்தித்தபோது, யமகுச்சி வென்றிருந்தாா். மறுபுறம் லக்ஷயா சென், போட்டிதரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதுகிறாா். அவா்கள் 2 முறை மோதியுள்ள நிலையில் இருவரும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT