கோப்புப்படம் 
செய்திகள்

கனடா ஓபன்: அரையிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி!

கனடா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார்.

DIN

கனடா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார்.

கனடாவின் கல்கரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் காவோ பாங் ஜியுடன் மோதினார். அதில், அவர் 21-13, 21-7 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். அதன்மூலம் அரையிறுதிக்கும் முன்னேறினார். அரையிறுதில் பி.வி.சிந்து, முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் மோதுவதாக இருந்தது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் 14-21, 15-21 என்ற செட் கணக்கில்  பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். 

முதல்நிலை விராங்கனையான  ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT