கோப்புப் படம் (ரோஹித், கவாஸ்கர்) 
செய்திகள்

வெளிநாடுகளில் ரோஹித்தின் கேப்டன்சி வருத்தமளிக்கிறது: சுனில் கவாஸ்கர் 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி கேள்விக்குள்ளாகியுள்ளதென முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோசமாக தோல்வியுற்றது. அஸ்வினை தேர்வு செய்யாதது, பௌலிங்கினை தேர்வு செய்தது, டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்ஸர் பந்துகளை போடாதது என பல்வேறு விமர்சனங்களை பலரும் வைத்தனர். அதில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகவே கூறியிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் கவாஸ்கர் கூறியதாவது: 

ரோஹித்திடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் வேறு. வெளிநாட்டில் எப்படி செயல்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் உண்மையான் டெஸ்ட். அப்படி பார்க்கையில் அதிருப்திதான் உண்டாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டிலும் இந்தியா சரியாக விளையாடவில்லை. ஐபிஎல்லில் 100 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தும் டி20 போட்டிகளில் இறுதி சுற்றுக்கு செல்லமுடியவில்லை. 

பயிற்சியாளர் திராவிட், ரோஹித் கலந்து பேச வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்தப் பிறகு ரோகித் சொல்கிறார் பயிற்சி செய்ய போதிய காலமில்லை என. இன்னும் எவ்வளவு நாள்கள் வேண்டுமென நினைக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் 20 ஓவர்கள் விளையாடுவது வேலைப் பளுவா? 

ஒரு பேட்டர் தொடர்ந்து ஒரே தவறினை செய்யும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். லெக் ஸ்டம்பிற்கு பதிலாக ஆஃப் ஸ்டம்பில் கார்ட் எடுத்து விளையாடலாம் என்று ஆலோசனை வழங்கலாம். நான் இது போல சேவாக்கிற்கு கூறியுள்ளேன். அன்று பலரும் இதுபோல சந்தேகம் கேட்பார்கள். தவறினை திருத்திக் கொள்வார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு பேட்டர்கூட என்னிடம் கேட்பதில்லை. 

அணியிலும் நல்ல சூழ்நிலை நிலவவில்லை. வீரர்கள் தங்களுக்குள்ளாகவே நட்புணர்வுடன் இல்லாமல் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT