கோப்புப் படம் 
செய்திகள்

தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை! 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் இருவரையும் விக்கெட் எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். 

DIN

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்டில் 474 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2வது இடத்திலும் இருக்கிறார். 

இந்திய அணி தற்போது மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது. 

தற்போது, டேகனரின் சந்திரபால் விக்கெட்டினை அஸ்வின் எடுத்துள்ளார். இவரது அப்பாவான ஷிவ்நரைன் சந்திரபால் விக்கெட்டினையும் 2011இல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT