முகப்பு
செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியா வலுவான தொடக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 12) தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வலுவான தொடக்கத்தைத் தந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் யசஷ்வி ஜெய்ஸ்வால் வலுவான தொடக்கத்தைத் தந்தனர். நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ஜெய்ஷ்வால் 40 ரன்களுடனும், ரோஹித் சர்மா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், இன்று (ஜூலை 13)  இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →