அரைசதமடித்த பாகிஸ்தானின் அஹா சல்மான் பேட்டினை உயர்த்தி கொண்டாடுகிறார். 
செய்திகள்

காலே டெஸ்ட்: பாகிஸ்தான் நிதான ஆட்டம் - 221/5

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 221/5 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. 

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். 15.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வந்தது. பின்னர் நிலைத்து ஆடிய ஆஞ்சலோ மேதிவ்ஸ், தனஞ்செய டி சில்வா ஜோடி 131 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்தார்கள். 

மேதிவ்ஸ் 61 ரன்களுக்கும் தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது. ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 2ஆம் நாள் முடிவில் 221/5 ரன்கள் எடுத்துள்ளது. இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமானது.  ஷான் மசூத் 39 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் ஆஸம் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  

தற்போது களத்தில் ஷகீல் 69* ரன்களுடனும் அஹா சல்மான் 61* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியை விட பாகிஸ்தான் அணி 91 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவப்படி இரு அணிகளும் சம பலத்தில் உள்ளது. 3வது நாள்தான் போட்டி யார் பக்கம் திசை திரும்பும் எனத் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT