செய்திகள்

தோனிக்கு வாகனங்கள்தான் மிகவும் பிடிக்கும்! வைரல் விடியோ!

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டில் அவர் சேகரித்து வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள், கார்களின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே இந்தியக் கேப்டனாக தோனி இருக்கிறார். கீப்பர்- பேட்டர் என்பதை விடவும் அணியின் தலைவன் என்பதில் அனைவருக்கும் தோனி மீது தனிவிதமான அன்பு இருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தோனி எப்போதும் நெருக்கமான ஒரு கிரிக்கெட் வீரர். முன்னம் ஒருநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

தோனிக்கு நாய்கள், பைக்குகள் மீது அளவற்ற ப்ரியம் என்பது அவரது ரசிகர்களுக்கு அனைவருக்கும் தெரியும். பிறந்த்நாளை நாய்களுடன் கொண்டாடிய தோனியின் விடியோ இணையத்தில் வைரலானது. 

தற்போது இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிர்சாத் தோனியின் வீட்டில் அவர் சேகரித்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள், கார்களின் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவில்  வெஙடேஷ் பிர்சாத மற்றும் சில நண்பர்கள் தோனியுடன் இருக்கிறார்கள். 

இந்தப் பதிவில் வெங்கடேஷ் பிரசாத், “இவ்வளவு ஆர்வம் மிகுந்த மனிதரை நான் பார்த்ததேயில்லை. எவ்வளவு வகையான பைக்குகள், கார்கள். என்ன மாதிரியான் நபர் தோனி. மிகப்பெரிய சாதனையாளர், அதைவிடவும் நல்ல மனிதர். ராஞ்சி வீட்டில் உள்ள அவரது பைக் கலெக்‌ஷன்கள் குறித்து சிறிய க்ளிம்ஸ் விடியோ இது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தோனி வீட்டில் இருக்கும் பைக்குகள், கார்கள் ஷோரூமில் இருப்பது போலுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT