செய்திகள்

2ஆம் நாள்: 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் மே.இ.தீவுகள்! 

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி, 2ஆம் நாள் முடிவில் 86/1 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டினை வென்ற நிலையில் 2வது டெஸ்டில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதிகபட்சமாக விராட் கோலி 121, ரோஹித் 80, ஜடேஜா 61, அஸ்வின் 56 ரன்களும் எடுத்து அசத்தினர். வாரிகன், ரோச் தலா 3 விகெட்டுகளை எடுத்து அசத்தினர். அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மே.இ.தீவுகள் அணி 86 ரன்களுக்கு 1 விக்கெட்டினை இழந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது. 

கேப்டன் ப்ரத்வெயிட் 128 பந்துகளில் 37 ரன்களும் கிர்க் மெக்னிஜ் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தேஜ்நரைன் சந்திரபால் 33 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT