சாதனை படைக்க காத்திருக்கும் கோலி, ரோஹித்!
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.
மேற்கிந்தியத் தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் விராட் கோலி 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் தொடரில் 13,000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ள கோலி, 57.32 சராசரியுடன் 46 சதங்கள், 65 அரைசதங்களை அடித்துள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா மற்று ரிக்கி பண்டிங் ஆகியோர் 13,000 ரன்களை கடந்துள்ளனர்.
இதையும் படிக்க | இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்: இந்தியா - மே.இ. தீவுகள் மோதல்
அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் 175 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டுவார். இவர் 243 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்கள், 48 அரைசதங்கள் அடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இருவரும் புதிய மைல்கல்லை எட்ட அதிக வாய்ப்புள்ளது.