ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல்!
ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ஆப்கானிஸ்தான் வீரர் செதிகுல்லா அடல் அசத்தியுள்ளார்.
ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ஆப்கானிஸ்தான் வீரர் செதிகுல்லா அடல் அசத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் காபூல் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த காபூல் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷகீன் ஹண்டர்ஸ் மற்றும் அபாஸின் டிஃபெண்டர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஆப்கானிஸ்தானின் அயோபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஷகீன் ஹண்டர்ஸ் அணியைச் சேர்ந்த செதிகுல்லா அடல் 56 பந்துகளில் 118 ரன்கள் விளாசி அசத்தினார்.
இதையும் படிக்க: ஆஷஸ் டெஸ்டில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
Advertisement
Advertisement
செதிகுல்லா அடல் பேட் செய்தபோது ஆட்டத்தின் 19-வது ஓவரை வீச வந்தார் அமீர் சசாய். முதல் பந்தை அமீர் சசாய் நோபாலாக வீச அதனை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் செதிகுல்லா. அதன்பின் அகலப் பந்து வீசி 5 ரன்களை சசாய் விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து சசாய் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் அடல். சசாய் வீசிய அந்த ஓவரில் மட்டும் ஷகீன் ஹண்டர்ஸ் அணிக்கு 48 ரன்கள் கிடைத்தது.
இதன்மூலம், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்தார் செதிகுல்லா அடல். அவர் சசாய் வீசிய நோபாலில் அடித்த சிக்ஸரையும் சேர்த்து மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.