முகப்பு
செய்திகள்

இங்கிலாந்தில் முதல் சதம்: பேட்டை தூக்கி வீசி கொண்டாடிய ஆஸி. வீரர்! (விடியோ)

பிரல ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து பேட்டினை தூக்கிவீசி கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

ஆஷஸ் கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் பா்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 311/5 ரன்களைக் குவித்துள்ளது. அதன் வீரா் உஸ்மான் கவாஜா 126, டிராவிஸ் ஹெட் 50. அலெக்ஸ் கரே 52 ரன்களை விளாசினா். இங்கிலாந்தைக் காட்டிலும் 82 ரன்கள் பின்தங்கி உள்ளது ஆஸி. 

இங்கிலாந்தில் குறைவான சராசரியை கொண்ட கவாஜா 2019இல் ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அதே ஆஷஸ் தொடரில் தனது முதல் சதத்தினை இங்கிலாந்தில் நிகழ்த்தியுள்ளார் கவாஜா. இது அவரது 15வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

ஆஸ்திரேலியாவில் 9 சதங்கள், பாகிஸ்தானில் 2 சதங்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, யுஏஇ, இந்தியாவில் தலா 1 சதங்களையும் விளாசியுள்ளார்.

இங்கிலாந்தில் சதம் அடித்ததும் மகிழ்ச்சியில் பேட்டினை தூக்கி வீசி கொண்டாடினார் உஸ்மான் கவாஜா. இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments