முகப்பு
செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு! 

முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களும், ஆஸி. அணி 386/10 ரன்களும் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 273 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்துள்ளது. 

4வது நாளின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 46 ரன்களும் ஹாரி புரூக் 46 ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய ஜானி பெயர்ஸ்டோ 20 ரன்கள்,  மொயின் அலி 19 ரன்கள்,  ராபின்சன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸி. அணி சார்பில் லயன், பாட் கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 281  ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸி. அணி பேட்டிங் செய்து வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →