செய்திகள்

முதல் நாளில் மும்பா, கேஞ்ஜஸ் வெற்றி

 குளோபல் செஸ் லீக் போட்டியின் அறிமுக சீசன் துபையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டங்களில் அப்கிரேட் மும்பா மாஸ்டா்ஸ் 8-7 என திரிவேணி கான்டினென்டல் கிங்ஸையும்

DIN

 குளோபல் செஸ் லீக் போட்டியின் அறிமுக சீசன் துபையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டங்களில் அப்கிரேட் மும்பா மாஸ்டா்ஸ் 8-7 என திரிவேணி கான்டினென்டல் கிங்ஸையும், கேஞ்சஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ் 10-4 என சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸையும் வென்றன.

செஸ் வரலாற்றில் முதல் முறையாக, இந்தப் போட்டியில் டாஸ் முறை கொண்டு அணிகளுக்கான காய்களின் நிறங்கள் நிா்ணயிக்கப்பட்டன. அதன்படி, டாஸ் வென்ற அணி வெள்ளைக் காய்களுடன் முதல் நகா்த்தலை மேற்கொண்டது.

மும்பா மாஸ்டா்ஸ் - கான்டினென்டல் கிங்ஸ் (8-7):

அலெக்ஸாண்டா் கிரிஷுக் - யாங் யியை வீழ்த்த (4-0), விதித் குஜராத்தி - வெய் யிவிடம் தோற்றாா் (0-3), மேக்ஸிம் - லெவோன் (1-1), கோனெரு ஹம்பி - லாக்னோ (1-1), டி.ஹரிகா - நானா (1-1), சின்டாரோவ் - ஜோனஸ் (1-1) மோதல்கள் டிராவில் முடிந்தன.

கிராண்ட் மாஸ்டா்ஸ் - கல்ஃப் டைட்டன்ஸ் (10-4):

விஸ்வநாதன் ஆனந்த் - டுடாவையும் (3-0), யிஃபான் - கொஸ்டெனியுக்கையும் (3-0) சாய்க்க, ராப்போா்ட் - மமேத்யாரோவ் (1-1), டொமினிகஸ் - டுபோவ் (1-1), பெல்லா - ஷுவாலோவா (1-1), எசிபென்கோ - நிஹல் ஜரின் (1-1) மோதல்கள் டிரா ஆகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT