செய்திகள்

2343 நாள்கள் முதலிடத்தில் இருந்த ஒரே பந்து வீச்சாளர்: ஸ்டெயின் பிறந்தநாளில் ரசிகர்கள் நெகிழ்ச்சி! 

தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

DIN

இன்று தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பிறந்தநாள். 2004ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த ஸ்டெயின் 2019இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2021இல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சச்சின், ரோஹித் முதற்கொண்டு பல முக்கியமான பேட்டர்களை இவரது பந்து வீச்சில் தடுமாறும் அளவுக்கு சிறப்பாக பந்து வீசக்கூடியவர் ஸ்டெயின்.  

93  டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் ஒருமுறை 7 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார். 2009 முதல் 2014 வரை டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் ஸ்டெயின். 

இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்டெயினுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அவரது விடியோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT