செய்திகள்

’டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்களை கொடுத்தவன் நான், ஆனால்...’மனம் திறக்கும் நாதன் லயன்!

DIN

பேட்ஸ்மேன்கள் என்னுடைய பந்துவீச்சில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நாதன் லயன் மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணியின்  நாதன் லயனின் சுழலில் சிக்கி இந்திய அணி நிலை குலைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்பட பல முக்கிய விக்கெட்டுகளையும் தனது சுழலில் அவர் சிக்கவைத்தார்.

இந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் என்னுடைய பந்துவீச்சில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நாதன் லயன் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: எந்த மாதிரியான ஆடுகளத்தில் நான் விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. என்னுடைய பந்துவீச்சில் ஒருவர் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதில் தான் எனது ரகசியம் அடங்கி இருக்கிறது. எனது பந்துவீச்சில் நீண்ட நேரம் ஒருவர் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் நான் சரியான பந்துகளை வீசுகிறேன்  என்று அர்த்தம். எனது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் அடிப்பதை நினைத்து நான் கவலைப்படுவதில்லை. டெஸ்ட் வரலாற்றில் எனது பந்துவீச்சில் தான் முதலில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. எனது பந்துகளை பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பதை நினைத்து நான் கவலைப்படவில்லை.  எனது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தச் செய்வது சவாலானது. 

ஸ்டம்பின் வலதுபுறத்தில் இருந்து பந்து வீசுவதைப் பலரும் எதிர்மறையாகக் கூறுவார்கள். ஆனால், அதனை நான் முற்றிலும் நேர்மறையாகப் பார்க்கிறேன். இந்திய அணியின் வீரர்களுக்கு பந்துவீசுவது சவாலனதாக இருந்தது. ஆனால், நான் பந்துவீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

35 வயதாகும் நாதன் லயன் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 479 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT