செய்திகள்

கடைசி டெஸ்ட்: நேரில் காணும் இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள்!

குஜராத்தில் நாளை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர்.

DIN

குஜராத்தில் நாளை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர்.

பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி நாளை காலை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காணவுள்ளார்.

இந்த போட்டியை காண ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT