செய்திகள்

டபிள்யுபிஎல்: பெங்களூருவுக்கு 136 ரன்கள் இலக்கு

அலீசா ஹேலி தலைமையிலான யு.பி. வாரியர்ஸ் அணி அணியும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

DIN

யு.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் டி-20 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

அலீசா ஹேலி தலைமையிலான யு.பி. வாரியர்ஸ் அணி அணியும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அணி பேட்டிங் செய்தது. 

தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு.பி. அணியின் வீராங்கனைகள் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ( தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஹேலி ஒரு ரன்னுடனும் தேவிகா வைத்தியா ரன்கள் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்)

அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், கிரண் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 22 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர். 

இறுதியில் யு.பி. அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT