செய்திகள்

ஆர்சிபி அணியில் ஹேசல்வுட்: மீண்டும் விராட் கேப்டன்?  

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இன்று மாலை நடைபெறும் போட்டியில் லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. 

காயம் காரணமாக இதுவரை விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் ஆர்சிபி அணியில் இடம்பெற்றால் அந்த அணி இன்னும் வலுவாக இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் போட்டியில் மீண்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவாரெனவும் டு பிளெஸ்ஸிக்கு இன்னும் காயம் முழுமையாக குணமடையவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லக்னௌ அணியில் கடந்த ஆடத்தில் சிறப்பாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT